Tuesday, August 3, 2010

3 யோவான் – ஒரு ஆய்வு

கண்டுபிடித்தல் (OBSERVATION)

1. இந்த நிருபம் யாருக்கு யாரால் எழுதப்பட்டது?

2. “பிரியமானவனே” என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது? எந்தெந்த வசனங்களில் வருகிறது?

3. “சத்தியம்” என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது?

4. “சாட்சி” என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது?

5. இந்த நிருபங்களில் யோவான் குறிப்பிடும் மூன்று நபர்கள் யார்? யார்?

6. இயேசுவைப் பற்றி என்னென்ன சாட்சி கூறப்பட்டிருக்கிறது?

7. யோவானை ஏற்றுக் கொள்ளாத முக்கியமான நபர் யார்? அவன் செய்து வருகிற முக்கியமான மூன்று செயல்கள் யாவை?

கருத்து அறிதல் (INTERPRETATION)

1. யோவான் காயுவுக்காகச் செய்யும் விண்ணப்பம் என்ன? அதன் பொருள் என்ன?

2. யோவானுடைய அதிகமான சந்தோஷத்திற்கு காரணம் என்ன?

3. காயுவினித்தில் காணப்பட்ட சிறந்த கிறிஸ்தவப் பண்பு என்ன?

4. ஊழியர்களை சேர்த்துக் கொள்ள கடனாளிகளாய் இருக்கிறோம். ஏன்?

5. தேவானால் உண்டாயிருப்பவனை எப்படி இனம் காணலாம்?

6. மெய்யான சாட்சியின் வாழ்க்கை நடத்துவதை எவ்வித சான்றுகளில் அறியலாம்?

7. கிறிஸ்துவின் ஊழியர்களுக்கு பாடுகள் சபையிலிருந்து வருமா? இக்கால சூழ் நிலையில் இது எப்படி பொருந்தும்?

8. “எழுத வேண்டிய காரியங்கள் அநேகம். எழுத எனக்கு மனமில்லை” ஏன் இப்படிக் கூறுகிறார்?

கடைப்பிடித்தல் (APPLICATION)

1. என்னுடைய நடை, என்னுடைய உண்மை(வாழ்க்கை, வார்த்தை) இவற்றைக் குறித்து பிதா சந்தோஷம் படும் படியாக சாட்சி இருக்க வேண்டும்.

2. என்னுடைய பணி, பாகுபாடற்றதாய் இருக்க வேண்டும்.

3. முதன்மையாய் இருக்க விரும்புவதை விட முதல் தரமான சாட்சியாய் இருக்க விரும்புகிறேன்.

No comments: