Monday, July 12, 2010

எபேசியர் – 2 : 1 – 10 (ஒரு வேத ஆய்வு) (Ephesians : 2 : 1-10)

மனிதனின் சுபாவ நிலையைப் பற்றி இப்பகுதி என்னக் கூறுகிறது?

     பாவங்களினாலும்,அக்கிரமங்களினாலும் 
     மரித்தநிலை,
     சாத்தானுக்கு அடிமை,
     தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் (வ : 1 – 3)

இந்த நிலை மாறுவதற்கு கடவுள் (இறைவன்) என்ன செய்தார்? ஏன்?
     நம்மீது இரக்கம் வைத்தார், 
     கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பித்தார்,
     நம்மீது அன்பு செலுத்தினார். (வ : 4 – 7)

3.     நாம் எப்படி இரட்சிக்கப்பட அல்லது மீட்கப்பட முடியும்?
     நம்முடைய நற்செயலினால் அல்ல, கடவுளின்
     தயவினால், விசுவாசத்தைக்கொண்டு 
     இரட்சிக்கப்பட முடியும் (வ :8,9)

4.     கடவுள் நம்மை ஏன் இரட்சித்தார்  ?
     நாம் நற்செயல் செய்வதற்காக,
     இது கடவுளால் முன்குறிக்கப்பட்டது (வ : 10)

Tuesday, July 6, 2010

இயேசு கிறிஸ்து வாழ்வின் ஒளி (யோவான் – 3 : 16 – 21)

இயேசு கிறிஸ்து வாழ்வின் ஒளி
(யோவான் – 3 : 16 – 21)
பாவம் 
  • இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை அழிக்கிறது.
  • இறைவனிடமிருந்து நம்மை மறைந்து வாழ கட்டாயப்படுத்துகிறது.
ஒளியாகிய கிறிஸ்து,
ü  நாம் இறைவனை புரிந்து கொள்ளுவதற்கான திறமையைத் தருகிறார்.
ü  நம்மையும் நம்மைச்சுற்றியுள்ள உலகத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறார்.
ஒளியாகிய கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தது நம்மை அழிப்பதற்காகவோ அல்லது நியாயம் விதிப்பதற்காகவோ அல்ல, நம்மை இரட்சிப்பதற்காகவே வந்தார். ( 3: 17)
மனுக்குலத்தின் அடிப்படை குணம்:
·         இருளை நேசிப்பது
·         தீமை (பொல்லாப்பு) செய்வதில் சந்தோஷம் காண்பது
இக்குணம் மனிதன், தன் நம்பிக்கையை இறைவன் மீது வைப்பதைத் தடை பண்ணுகிறது.
ஒளியாகிய கிறிஸ்துவை பகைப்பதினால் பாவத்தின் மீது மோகம் ஏற்படுவதோடு, வாழ்க்கையின் தரம் நஷ்டபட்டு, நித்திய அழிவு ஏற்படுகிறது.
ஒளியாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தன்னை அர்ப்பணித்தவர்களோ, ஏற்கனவே மீட்கப்பட்டதோடு, நித்திய அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
அனுதினமும் ஒளியாகிய கிறிஸ்துவிடம் வருவதென்பது ஓர் பேராசீர்வாதம். இது கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும், நித்திய வாழ்வின் உறுதியையும் வளர்க்கிறது.
ஒளியாகிய கிறிஸ்து நம் வாழ்வின் நாயகனாகும் பொழுது, நம் வாழ்வு மலர்கிறது.
ஓ!! மெய்யான ஒளியே, என் மூலம் பிரகாசியும். அப்பொழுது நான் அனெகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவேன்.

Thursday, July 1, 2010

சங்கீதம் 71 ஒரு பகுத்தாய்வு:

சங்கீதக்காரனுக்கு கடவுளின் மீதுள்ள நம்பிக்கை என்ற பொருளை மையமாக கொண்ட ஒரு புலம்பல் சங்கீதம் தான் சங்கீதம் 71.

இந்த சங்கீத்தை பின்வருமாறு பிரிக்காலம்.

  1. கடவுளின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையை சங்கீதக்காரன் அறிக்கை பண்ணுதல் (வசனங்கள் 1 – 3)
  2. துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சங்கீதக்காரனின் கோரிக்கை (வசனங்கள் 4 – 6)
  3.  துன்பத்தின் நடுவிலும், கடவுளைத்துதிப்பாடுவதற்கான சங்கீதக்காரனின் உறுதியான தீர்மானம் (வசனங்கள் 7 – 8)
  4. விடுதலைக்கான சங்கீதக்காரனின் கோரிக்கைகள் (வசனங்கள் 9 – 12)
  5. பகைவனை நியாயம் தீர்க்க வேண்டி சங்கீதக்காரனின் ஓலம்              (வசனம் 13)
  6. கடவுளை நம்புவதற்கும், அவரை துதிப்பதற்குமுள்ள சங்கீதக்காரனின் அர்ப்பணம் (வசனங்கள் 14 – 16)
  7. கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடந்தகால அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கோரிக்கையை புதுப்பித்தல்              (வசனங்கள் 17 – 21)
  8. கடவுளை துதிப்பதற்காக சங்கீதக்காரனின் உறுதியான தீர்மானம் (வசனங்கள் 22 – 24)

சங்கீதக்காரனின் இடத்தில் வாசிக்கும் நபர் தன்னை பாவித்து வாசிக்கும் பொழுது சங்கீத்தின் புது பொருளை கடவுள் வெளிப்படுத்துவார்.
நன்றி – http://www.biblestudy.org/basicart/psalm-construction.html