Tuesday, July 6, 2010

இயேசு கிறிஸ்து வாழ்வின் ஒளி (யோவான் – 3 : 16 – 21)

இயேசு கிறிஸ்து வாழ்வின் ஒளி
(யோவான் – 3 : 16 – 21)
பாவம் 
  • இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை அழிக்கிறது.
  • இறைவனிடமிருந்து நம்மை மறைந்து வாழ கட்டாயப்படுத்துகிறது.
ஒளியாகிய கிறிஸ்து,
ü  நாம் இறைவனை புரிந்து கொள்ளுவதற்கான திறமையைத் தருகிறார்.
ü  நம்மையும் நம்மைச்சுற்றியுள்ள உலகத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறார்.
ஒளியாகிய கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தது நம்மை அழிப்பதற்காகவோ அல்லது நியாயம் விதிப்பதற்காகவோ அல்ல, நம்மை இரட்சிப்பதற்காகவே வந்தார். ( 3: 17)
மனுக்குலத்தின் அடிப்படை குணம்:
·         இருளை நேசிப்பது
·         தீமை (பொல்லாப்பு) செய்வதில் சந்தோஷம் காண்பது
இக்குணம் மனிதன், தன் நம்பிக்கையை இறைவன் மீது வைப்பதைத் தடை பண்ணுகிறது.
ஒளியாகிய கிறிஸ்துவை பகைப்பதினால் பாவத்தின் மீது மோகம் ஏற்படுவதோடு, வாழ்க்கையின் தரம் நஷ்டபட்டு, நித்திய அழிவு ஏற்படுகிறது.
ஒளியாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தன்னை அர்ப்பணித்தவர்களோ, ஏற்கனவே மீட்கப்பட்டதோடு, நித்திய அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
அனுதினமும் ஒளியாகிய கிறிஸ்துவிடம் வருவதென்பது ஓர் பேராசீர்வாதம். இது கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும், நித்திய வாழ்வின் உறுதியையும் வளர்க்கிறது.
ஒளியாகிய கிறிஸ்து நம் வாழ்வின் நாயகனாகும் பொழுது, நம் வாழ்வு மலர்கிறது.
ஓ!! மெய்யான ஒளியே, என் மூலம் பிரகாசியும். அப்பொழுது நான் அனெகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவேன்.

No comments: